மாவட்ட செய்திகள்

திருப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச் சாலைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். + "||" + trafic rules

திருப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச் சாலைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

திருப்பூர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச் சாலைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர், அவினாசி, பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச் சாலைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
திருப்பூர்
திருப்பூர், அவினாசி, பல்லடம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க சுற்றுச் சாலைகள் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசல்
திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து செல்கிறது. மக்கள் தொகை பெருக்கம், அதன் அடிப்படையில் வாகனங்களின் பெருக்கம் காரணமாக மாநகரின் நெரிசல் அதிகரித்து வருகிறது.
உள்ளூர் திட்டக் குழுமத்தின் எல்லைக்கு உட்பட்ட திருப்பூர், அவினாசி, பல்லடம் ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை திட்டத்தின் கீழ் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான ஆய்வுக்கூட்டம் நேற்றுமாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சுற்றுச்சாலை
மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உள்ளூர் திட்ட குழுமம் அதிகாரிகள், காவல்துறை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறையினர் கலந்து கொண்டனர்.
திருப்பூர், அவினாசி, பல்லடம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்கள், சாலை சந்திப்பு, பஸ் நிறுத்தம் ஆகியவற்றை ஆய்வு செய்தும், மேலும் சுற்றுச்சாலைகள் அமைக்கவும் திட்ட அறிக்கையை தனியார் நிறுவனத்தினர் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கோவை விமான நிலையம்
திருப்பூர் மாநகரில் இருந்து பின்னலாடை வர்த்தகர்கள் கோவை விமான நிலையத்துக்கு தாமதமின்றி செல்லும் வகையில் சாலை பணிகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 10 வகையான மேம்பாட்டு திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன.
இந்த அறிக்கையை திருப்பூர் மாவட்ட கலெக்டரிடம் ஆலோசனை செய்து அதன் பிறகு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று- 3 நாட்கள் பள்ளி விடுமுறை
திருப்பூரில் 4 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருப்பூர், திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
3. திருப்பூர், சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.
திருப்பூர், சுதந்திர போராட்ட வீரர்களின் பட்டியலில் இருந்து பெரியார் பெயரை நீக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வினீத்திடம், அர்ஜூன் சம்பத் மனு கொடுத்தார்.
4. திருப்பூர், பல்லடத்தில்தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
திருப்பூர், பல்லடத்தில்தொடங்கப்பட்ட தொழில் நிறுவனங்களை கலெக்டர் ஆய்வு செய்தார்
5. திருப்பூர்,பல்லடத்தில் போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்,பல்லடத்தில் போக்குவரத்து கூட்டமைப்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.