மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி


மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 14 July 2021 11:19 PM IST (Updated: 14 July 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊட்டி

ஊட்டி வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், அட்மா திட்டத்தின் மூலம் மண்வள மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் ஒசஹட்டியில் நடைபெற்றது. மண் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராஜன் மண் வளத்தை மேம்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். 

மண் ஆய்வு கூட தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜெயந்தி மண் மாதிரி எடுக்கும் முறைகள் மற்றும் மண்ணில் உள்ள நுண்ணூட்ட சத்துக்களின் அளவை அறிந்து உரமிடுதல் குறித்து எடுத்துரைத்தார். தோட்டக்கலை துறையில் உள்ள அனைத்து திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

பயிற்சியில் விவசாயிகள் 14 பேருக்கு மண்வள அட்டை வழங்கப்பட்டது. இதில் தொழில்நுட்ப உதவி மேலாளர் அஸ்வினி மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Next Story