வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை


வேலூர் மாவட்டத்துக்கு 9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை
x
தினத்தந்தி 14 July 2021 11:37 PM IST (Updated: 14 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

9 ஆயிரம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வருகை

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக மாவட்டத்தில் 11 இடங்களில் நிரந்தர தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு உள்ளது. 

அதைத்தவிர ஆரம்ப, நகர்புற சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

வேலூர் மாவட்டத்துக்கு கடந்த 11-ந்தேதி 9 ஆயிரம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவற்றில் சுமார் 2 ஆயிரம் மருந்துகள் மட்டும் கையிருப்பு காணப்பட்டன.

 இந்த நிலையில் நேற்று சென்னையில் இருந்து வேலூர் மாவட்டத்துக்கு 5 ஆயிரம் ‘கோவிஷீல்டு’, 4 ஆயிரம் ‘கோவாக்சின்’ தடுப்பூசி மருந்துகள் வந்தன. அவை நிரந்தர தடுப்பூசி முகாம்கள், சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story