புகளூர் காகித ஆலை தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்தனர்
புகளூர் காகித ஆலை தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு வந்திருந்தனர்.
நொய்யல்
கரூர் மாவட்டம், புகளூரில் காகித ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கொரோனாவால் உயிரிழந்த காகித தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க வேண்டும், தொழிலாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யாமல் முக்கியமான சில பிரிவுகளை ஒப்பந்த முறையில் விடுவதை கண்டித்தும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி ஏமாற்றும் காகித ஆலை நிர்வாகத்திற்கு கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 360 தொழிலாளர்கள் காலை முதல் மாலை வரை 3 ஷிப்டிலும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்குச் சென்றனர். அப்போது கையில் பதாகை ஏந்தி காகித ஆலைக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர். இதில் அண்ணா தொழிற்சங்கத் தலைவர் நாகராஜ், பொருளாளர் ஹரிஷ் ஏழுமலை ஆகியோர் தொழிலாளர்களுக்கு கருப்பு பேட்ஜ் அணிவித்தனர்.
Related Tags :
Next Story