பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம்


பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம்
x
தினத்தந்தி 15 July 2021 12:56 AM IST (Updated: 15 July 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி படுகாயம் அடைந்தார்.

சாத்தூர், 
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் சிவகாசி பழனி ஆண்டவர் தெருவை சேர்ந்த கதிரேசன் (வயது70) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.  இங்கு பேன்சி ரக பட்டாசு வெடிகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆலையில் கதிரேசன் மகன் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டாசு தயாரிக்க வெடிகளில் மருந்து செலுத்தி கொண்டிருக்கும் பொழுது ஏற்பட்ட உராய்வினால் வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில்  சுந்தர குடும்பன் பட்டியை சேர்ந்த முகேஷ் கண்ணன் (வயது25) என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவரை சிவகாசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சாத்தூர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் வெடிவிபத்து ஏற்பட்ட அறையிலிருந்து மற்ற அறைகளில் தீ பரவாமல் தடுக்கப்பட்டது.  சாத்தூர் ஆர்.டி.ஓ. புஷ்பா, துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜ், தாசில்தார் வெங்கடேசன், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சாத்தூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story