காமராஜர் புகைப்பட கண்காட்சி
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் காமராஜர் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
விருதுநகர்,
விருதுநகர் அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி வரை காமராஜர் தொடர்பான பல்வேறு புகைப்படங்கள் இடம் பெற்றுள்ள கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் அவரது சாதனைகள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்ட புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. பொதுமக்கள் இந்த கண்காட்சியை வருகிற 24-ந் தேதி வரை கண்டு களிக்கலாம் என்று அருங்காட்சியக காப்பாளர் கிருஷ்ணம்மாள் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story