விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நட்சத்திர ஆமை சிக்கியது
சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நட்சத்திர ஆமை சிக்கியது. இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி,
சிவகாசியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நட்சத்திர ஆமை சிக்கியது. இதுதொடர்பாக 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளம்பரம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 23). இவர் திருவண்ணாமலையில் வேலை செய்த போது அங்கு ஒரு ஆமை கிடைத்ததாக கூறப்படுகிறது. அதை கொண்டு வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வீட்டில் வளர்த்து வந்தார். இந்த நிலையில் ஆமையை விற்பனை செய்வதற்காக யூடிப்பில் விளம்பரம் செய்துள்ளார்.
இதை பார்த்த கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக் (23), நிதின் (20) ஆகியோர் ஆமையை வாங்க தயாராக இருப்பதாக செல்போனில் கூறி அதற்கான விலையை பேசி உள்ளனர். பின்னர் பணத்துடன் சிவகாசிக்கு வந்துள்ளார்.
நட்சத்திர ஆமை
அப்போது பிரசாந்த் தனது நண்பரான சாமிநத்தம் கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் (23) என்பவருடன் சிவகாசி பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அங்கு வந்த கேரளா வாலிபர்கள் அருகில் உள்ள மதுக்கடைக்கு சென்று அங்கு ஒரு பையில் இருந்த நட்சத்திர ஆமையை காட்டி பணம் பெற முயன்றுள்ளனர்.
அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த சிவகாசி கிழக்கு சப்-இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், 4 வாலிபர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதில் ஆமையை விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த ஆமையை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்படைக்க தேவையான நடவடிக்கையை எடுத்தனர்.
Related Tags :
Next Story