அரியலூர் மாவட்டத்தில் மழை
அரியலூர் மாவட்டத்தில் மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன
அரியலூர்
தா.பழூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் வானில் திடீரென கரு மேகங்கள் திரண்டன. பின்னர் சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. கோட்டியால் கூழாட்டுகுப்பம் பகுதியில் முருங்கை மரம் முறிந்து மின்கம்பி மீது விழுந்ததில் மின்கம்பம் முறிந்தது. இதனால் கோட்டியால் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. ஆண்டிமடம் பகுதியில் நேற்று மாலை திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த மழை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்தது. இதன் காரணமாக ஆண்டிமடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் பூமி குளிர்ந்தது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாலை 4 மணிக்கு மேல் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது. இதனால்சாலைகள் மற்றும் நீர் நிலைகளில், தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்தது. மீன்சுருட்டி பகுதியில் சுமார் 2 மணி நேரம் மழை பெய்தது. இந்த மழை கோடை உழவுக்கு ஏற்றதாக இருக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Tags :
Next Story