கஞ்சா விற்ற 5 பேர் கைது
திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர்,
திருச்சியில் கஞ்சா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி வயலூர்ரோடு உய்யகொண்டான் பாலம் அருகே கஞ்சா விற்றதாக திருச்சி சீனிவாசநகரை சேர்ந்த சந்திரசேகரை (வயது 49) உறையூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 450 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் திருச்சி உறையூர் லிங்கநகர் அருகே கஞ்சா பதுக்கி வைத்து இருந்த அதேபகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரனை (22) கைது செய்த, போலீசார் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதேபோல் கல்லுக்குழி ரெயில்வே மைதானம் அருகே கஞ்சா விற்ற ஒருவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் கொட்டப்பட்டு பகுதியில் கஞ்சா விற்றதாக அகதிகள் முகாமை சேர்ந்த பாவேந்திரனை (26) கே.கே.நகர் போலீசார் கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதேபோல் திருச்சி எடமலைப்பட்டி புதூர், மில் காலனியில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த பூபாலனை (25). எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story