சென்னை கீழ்பாக்கம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை


சென்னை கீழ்பாக்கம் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 15 July 2021 11:18 AM IST (Updated: 15 July 2021 11:18 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கீழ்பாக்கம், ஸ்கூட்டரில் சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபருக்கு வலைவீச்சு.

சென்னை, 

சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆஷா (வயது 30-பெயர் மாற்றப்பட்டுள்ளது). பட்டதாரி பெண்ணான இவர், கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார். இவருடைய கணவர், ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு கீழ்பாக்கம் கார்டன் பகுதியில் தனது ஸ்கூட்டரில் ஆஷா தனியாக சென்று கொண்டிருந்தார். இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர், ஆஷாவை பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

ஒரு கையால் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டு இன்னொரு கையால் ஆஷாவின் உடலை தொட்டு, தொட்டு பாலியல் ரீதியாக ரகளை செய்தார். அந்த வாலிபரின் செக்ஸ் சேட்டை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் ஆஷா தனது ஸ்கூட்டரை நிறுத்தி அந்த வாலிபரிடம் சண்டை போட்டார்.

முககவசம் அணிந்திருந்த அந்த வாலிபர், தனது சேட்டைகளை விட்டு, விட்டு மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பி ஓடி விட்டார். அந்த நபர் மீது ஆஷா கீழ்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். கீழ்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் ரமேஷ் மேற்பார்வையில் போலீசார் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

Next Story