கிழக்கு கடற்கரை சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


கிழக்கு கடற்கரை சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 15 July 2021 3:42 PM IST (Updated: 15 July 2021 3:42 PM IST)
t-max-icont-min-icon

கிழக்கு கடற்கரை சாலையில் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு.

சென்னை,

சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மரக்காணம் அருகில் உள்ள பரமன்கேணியில் தனது மகன் கட்டி வரும் புதிய வீட்டை பார்வையிட சென்று கொண்டிருந்தார்.

மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் செல்லும்போது காரின் குளிர்சாதன எந்திரம் திடீரென பழுதானதால் மின்கசிவு ஏற்பட்டு காரின் முன்பகுதியில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை கண்ட மணிமாறன் நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு, தனது குடும்பத்தினருடன் கீழே இறங்கினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த மாமல்லபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் காரில் எரிந்த தீயை அணைத்தனர். எனினும் காரின் முன்பகுதி மட்டும் தீயில் எரிந்து நாசமானது. இதனால் பூஞ்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story