‘கவரிங்’ நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4½ கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது


‘கவரிங்’ நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4½ கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது
x
தினத்தந்தி 15 July 2021 4:26 PM IST (Updated: 15 July 2021 4:26 PM IST)
t-max-icont-min-icon

‘கவரிங்’ நகைகளை அடகு வைத்து வங்கியில் ரூ.4½ கோடி மோசடி நகை மதிப்பீட்டாளர் கைது.

செங்குன்றம்,

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு மீஞ்சூரை சேர்ந்த மேகநாதன் (வயது 47) என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வந்தார். மேலும் இவர், மீஞ்சூர் பகுதியில் கவரிங் நகைகள் விற்பனை செய்யும் கடையும் வைத்து உள்ளார். இவர், 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகளில் வாடிக்கையாளர்கள் போர்வையில் தனக்கு தெரிந்தவர்கள் மூலம் போலி ‘கவரிங்’ நகைகளை வங்கியில் அடமானம் வைத்துள்ளார்.

நகை மதிப்பீட்டாளரான மேகநாதன், அவர்கள் கொண்டு வரும் கவரிங் நகைகளை சோதனை செய்வது போல் நடித்து அவை உண்மையான நகைகள் என சான்றளித்து மோசடி செய்ததாக தெரிகிறது. இவ்வாறு 400-க்கும் மேற்பட்ட போலி வாடிக்கையாளர்கள் மூலம் கவரிங் நகைகளை அடகு வைத்து ரூ.4 கோடியே 52 லட்சம் வரை மோசடி செய்து இருப்பது, வங்கி அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

இதுபற்றி அந்த வங்கியின் சென்னை மேலாளர் பிர்லா பிரசாத் தாஸ், அளித்த புகாரின்பேரில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேகநாதனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Next Story