கலெக்டர் ஆய்வு
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள ஆக்சிஜன் செறிவூட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தார்.
உடுமலை
உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட உள்ள ஆக்சிஜன் செறிவூட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு செய்தார்.
அரசு ஆஸ்பத்திரி
திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் நேற்று உடுமலை அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவர், ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்தும், உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு, மருந்து மற்றும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் குறித்தும் டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
ஆக்சிஜன் செறிவூட்டி
இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்படவுள்ள ஆக்சிஜன் செறிவூட்டி கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். இங்கு அமைக்கப்படும் செறிவூட்டி மூலம் நோயாளிகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் வழங்க முடியும்.
இந்த ஆய்வின்போது உடுமலை ஆர்.டி.ஓ. கீதா, தாசில்தார் வி.ராமலிங்கம், அரசுமருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முன்னதாக உலக மக்கள் தொகை தினத்தையொட்டி கலெக்டர் தலைமையில், அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story