கார் மோதி முறிந்து விழுந்த 2 மின்கம்பங்கள்


கார் மோதி முறிந்து விழுந்த 2 மின்கம்பங்கள்
x
தினத்தந்தி 15 July 2021 5:05 PM IST (Updated: 15 July 2021 5:05 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி முறிந்து விழுந்த 2 மின்கம்பங்கள்

வெள்ளகோவில்
வெள்ளகோவில் கடைவீதியில, கரூர்- கோவை ரோட்டில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வந்தது. அந்த கார் திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த 2 மின் கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த விபத்தில் 2 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்துக்குள்ளான காரில் எத்தனை பேர் வந்தனர், எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவில்லை. இந்த விபத்தினால் வெள்ளகோவில் போலீஸ் நிலையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலக பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மின்சாரம் தடைபட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். 
----

Next Story