பாசன வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை


பாசன வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 15 July 2021 5:10 PM IST (Updated: 15 July 2021 5:10 PM IST)
t-max-icont-min-icon

பாசன வாய்க்காலை தூர்வார விவசாயிகள் கோரிக்கை

வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள வள்ளியரச்சல் வழியாக கரூர் மாவட்ட எல்லையான மங்களபட்டி கிராமம் வரை பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி பிரதான பாசனவாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் ஆண்டுக்கு 2 முறை தண்ணீர் பாசனத்திற்கு திறந்து விடப்படும். இந்த நீரைக் கொண்டு விவசாயிகள் நெல், கடலை, எள் போன்றவைகளை பயிரிடுவார்கள். இந்த பிரதான வாய்க்காலில் தற்போது செடி கொடிகள் படர்ந்து இருப்பதால், தண்ணீர் திறந்து விட்டால் கடைசி மடைவரை முழுமையான பாசன நீர் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. எனவே தண்ணீர் திறக்கும் முன் இந்த பிரதான பாசன வாய்க்காலை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Next Story