மல்லிகைப்பூ விலை உயர்வு
மல்லிகைப்பூ விலை உயர்வு
திருப்பூர்
திருப்பூர்பல்லடம் ரோட்டில் உள்ள காட்டன் மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் இங்கு வந்து பூக்கள் மற்றும் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறார்கள். இதுபோல் சில்லரை மற்றும் மொத்த வியாபாரிகளும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில் மார்க்கெட்டில் நேற்று மல்லிகை பூ விலை கிடு கிடுவென உயர்ந்திருந்தது. இதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்திருந்தது. இருப்பினும் மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகமாக வந்து தங்களுக்கு தேவையான பூக்கள் மற்றும் காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறும்போது, இன்று வெள்ளிக்கிழமைசுபமுகூர்த்த தினம் என்பதால் மல்லிகை பூவின் தேவை அதிகமாக உள்ளது. இதனால் பலரும் மல்லிகை பூக்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று முன்தினம் ஒரு கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ நேற்று ரூ.200 உயர்ந்து, ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது என்றார்.
இதுபோல் மற்ற பூக்களின் விலை வருமாறு:- ஒரு கிலோ அரளி ரூ.200க்கும், சம்பங்கி ரூ.80க்கும், பிச்சி ரூ.280க்கும், முல்லை ரூ.280க்கும், கனகாம்பரம் ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை பூ நிலக்கோட்டை மற்றும் சத்தியில் இருந்து சுமார் 1,500 கிலோ விற்பனைக்கு வந்தது.
------
படம் உள்ளது.
----
Reporter : S.Thiraviya Raja_Staff Reporter Location : Tirupur - Tirupur
Related Tags :
Next Story