கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்


கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 July 2021 5:21 PM IST (Updated: 15 July 2021 5:21 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் தொண்டர்களுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இன்று பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள். இளம் வயது முதலே நாட்டின் விடுதலைக்காகவும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தமிழக மக்கள் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், கோட்பாடுகளை சரியாக கடைப்பிடித்து பெருந்தலைவரது பிறந்த நாளை கொண்டாட வேண்டும். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு த.மா.கா.வினர் தமிழகம் முழுவதும் மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி, முக கவசம், சுத்தம் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story