மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது
மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், சிறப்பு முயற்சிகள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதேபோல வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், நில சீர்திருத்த கமிஷனர், வருவாய் நிர்வாக கமிஷனர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர், பேரிடர் மேலாண்மைத்துறை இயக்குனர், நில நிர்வாக கமிஷனர், சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story