வணிகர் நல வாரியத்தில் 3 மாதங்களுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை மு.க.ஸ்டாலின் உத்தரவு


வணிகர் நல வாரியத்தில் 3 மாதங்களுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை மு.க.ஸ்டாலின் உத்தரவு
x
தினத்தந்தி 15 July 2021 2:54 PM GMT (Updated: 15 July 2021 2:54 PM GMT)

வணிகர் நல வாரியத்தில் 3 மாதங்களுக்கு இலவச உறுப்பினர் சேர்க்கை மு.க.ஸ்டாலின் உத்தரவு.

சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வணிகப் பெருமக்களின் நலனுக்காக இந்தியாவிலேயே முதன் முதலாகத் ”தமிழ்நாடு வணிகர் நல வாரியம்” என்ற அமைப்பு தமிழ்நாடு வணிகவரித் துறையில் 1989-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாடு வணிகவரி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு வணிக நல வாரியத்தில் உறுப்பினராக சேர்வதற்கு http://www.tn.gov.in./tntwb/tamilஎன்ற இணையவழி வசதி சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதில் சிரமம் இருப்பின் அருகில் உள்ள வரிவிதிப்பு அலுவலகங்களின் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவம் பெற்று பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் நேரிடையாகவும் சமர்ப்பிக்கலாம்.

தமிழக முதல்-அமைச்சர் வணிகர் நல வாரியத்தை சீரமைத்து உறுப்பினர் சேர்க்கையை செம்மைப்படுத்தி திறம்பட செயல்படும் வகையில் சிறு மற்றும் குறு வணிகர்களின் வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக இந்த வாரியத்தின் மூலம் நலத்திட்டங்களை செயல்படுத்த ஏதுவாக சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) சட்டத்தில் பதிவு பெற்று ”விற்று முதல் அளவு” ரூ.40 லட்சம் மட்டும் உட்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் ஜி.எஸ்.டி. சட்டத்தின் கீழ் பதிவு பெறாத குறு வணிகர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக சேர, சேர்க்கைக் கட்டணத் தொகையான ரூ.500 வசூலிப்பதிலிருந்து 15-ந்தேதி (இன்று) முதல் 3 மாதங்களுக்கு விலக்களித்து ஆணையிட்டுள்ளார்.

எனவே வணிகர்கள், தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story