எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் திடீர் ஆய்வு
கோவை
கோவை அரசு ஆஸ்பத்திரியில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க ஏ.ஆர்.டி. மையம் உள்ளது.
இங்கு நாள்தோறும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு பல்வேறு விதமான பரிசோதனைகள், தேவையான சிகிச்சை, மருந்துகள் வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குனர் ஹரிஹரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அவர் அங்குள்ள ஏ.ஆர்.டி. மையம், ரத்த வங்கி பிரிவு ஆகியவற்றை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் நிர்மலாவிடம் கேட்டறிந்தார்.
அப்போது சுகாதாரத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, ரத்த வங்கி துறை தலைவர் மங்கையர்கரசி மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
திட்ட இயக்குனர் ஹரிஹரன் கடந்த 2015-ம் ஆண்டு கோவை மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story