கழுகுமலை அருகே காண்டிராக்டர் மீது தாக்குதல்


கழுகுமலை அருகே காண்டிராக்டர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 15 July 2021 9:19 PM IST (Updated: 15 July 2021 9:19 PM IST)
t-max-icont-min-icon

கழுகுமலை அருகே காண்டிராக்டர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது

கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள குமரபுரம் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் ஸ்ரீதர்( வயது 35). ரோடு காண்டிராக்டர். இவர் நேற்று முன்தினம் கழுகுமலை அம்பேத்கார் நகரிலுள்ள தெருவில் ரோடு வேலை நடந்துகொண்டிருந்த இடத்தில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த அம்பேத்கார் நகரை சேர்ந்த பெருமாள் மகன் மகேஷ் என்பவர் ஸ்ரீதரை தகாத வார்த்தைகள் பேசி, அவரை தாக்கி விட்டு தப்பி சென்று விட்டாராம். இதுகுறித்து ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் மகேஷ் மீது கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story