விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வாங்கி பயன்பெறலாம் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தகவல்
விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் வீடுவாங்கி பயன்பெறலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்தார்.
விழுப்புரம்,
போலீசாருக்கு குடியிருப்புகள்
விழுப்புரம் மாவட்டம் கண்டம்பாக்கத்தில் உங்கள் சொந்த இல்லம் என்ற திட்டத்தின் கீழ் 9 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 44 போலீசார், ஏட்டுகளுக்கான குடியிருப்புகள் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் சார்பில் கட்டப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் கூடுதல் தலைமை இயக்குனரின் ஆலோசனைப்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன் ஆகியோர் நேற்று கண்டம்பாக்கம் சென்று அங்குள்ள கட்டுமான பிரிவில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு கட்டப்பட்டு வரும் இன்ஸ்பெக்டர், போலீசாருக்கான குடியிருப்புகளை பார்வையிட்டனர்.
சொந்த இல்லம்
மேலும் 1,655 சதுர அடி கொண்ட போலீசாருக்கான வீட்டின் மதிப்பு ரூ.22.18 லட்சம் என்றும், 1,855 சதுர அடி கொண்ட இன்ஸ்பெக்டர்களுக்கான வீட்டின் மதிப்பு ரூ.28.90 லட்சம் என்றும் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகத்தின் மூலம் முடிவு செய்யப்பட்டு குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. எனவே உங்கள் சொந்த இல்லம் திட்டத்தின் கீழ் வீடுவாங்கி போலீசார் பயன்பெறலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது காவலர் வீட்டு வசதி கழகத்தின் சேலம் செயற்பொறியாளர் அரவிந்தன், விழுப்புரம் உதவி செயற்பொறியாளர் சக்தி, உதவி பொறியாளர் ராஜாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story