7 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்


7 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல்
x
தினத்தந்தி 15 July 2021 10:26 PM IST (Updated: 15 July 2021 10:26 PM IST)
t-max-icont-min-icon

7 மாத குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் 7 வயது சிறுமி மற்றும் 11 வயது சிறுவன் உள்பட 3 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் திருப்பாலைக்குடி காந்திநகரை சேர்ந்த 7 மாத குழந்தைக்கும், ராமநாத புரம் கொல்லம்பட்டறை தெருவை சேர்ந்த 6 வயது சிறுவனுக்கும் நடத் தப்பட்ட சோதனையில் டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.மாவட்டத்தில் அடுத்தடுத்து சிறுவர்களை டெங்கு காய்ச்சல் பாதித்து வருவது பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story