வன்னிவேடு ஊராட்சியில் நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை
வன்னிவேடு ஊராட்சியில் நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை
வாலாஜா
ராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி வாலாஜா மேற்கு ஒன்றியம் வன்னிவேடு ஊராட்சியில் உள்ள நரிக்குறவர்களுக்கு நேற்று ரேஷன் அட்டை, முதியோர் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார்.
ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு நரிகுறவர்களுக்கு முதியோர் உதவித் தொகை மற்றும் புதிய ரேஷன்கார்டுகளை வழங்கி பேசினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அசோகன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் சக்திவேல்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story