கோத்தகிரியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கோத்தகிரியில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கோத்தகிரி
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக கோத்தகிரி அருகே உள்ள கெரடா மட்டம் கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே ராட்சத கற்பூரம் மரம் சாய்ந்து விழுந்தது.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் மாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சரிந்து கிடந்த மரத்தை மின்வாளால் வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இதேபோல கோத்தகிரியில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் அம்பேத்கார் நகர் அருகே சாலையின் குறுக்கே சாய்ந்து கிடந்த மரத்தையும் தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து சென்று வெட்டி அகற்றினர்.
Related Tags :
Next Story