குடிநீர் தொட்டி திறப்பு விழா


குடிநீர் தொட்டி திறப்பு விழா
x
தினத்தந்தி 15 July 2021 11:05 PM IST (Updated: 15 July 2021 11:05 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தொட்டி திறப்பு விழா நடந்தது.

காரைக்குடி, 
காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட ஒ.சிறுவயல் கிராமத்தில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் குளியல் தொட்டி, பி.முத்துப்பட்டினம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி, நேமம் கிராமத்தில் குளியல் தொட்டி ஆகியவை மாவட்ட கவுன்சில் நிதியில் இருந்து கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. நிகழ்ச்சியில் சாக்கோட்டை தி.மு.க. மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுப.சின்னத்துரை, முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பள்ளத்தூர் ரவி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெயந்தி சகாயம், சொக்கலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் மலர்மாணிக்கம், சித்ராசுந்தரி, முருகப்பன், குழந்தைவேலு உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் வக்கீல் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Next Story