திருப்பத்தூரில் சேறும் சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி


திருப்பத்தூரில்  சேறும் சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 15 July 2021 11:37 PM IST (Updated: 15 July 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் சேறும் சகதியுமான தெருக்களால் பொதுமக்கள் அவதி

திருப்பத்தூர்

திருப்பத்தூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ் 10 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டப்பட்ட சாலைகளில் தார் ரோடு போடப்படாமல் பல்வேறு தெருக்கள் உள்ளது.  ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு பணிகள் முடிவடைந்து சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் தொடர் மழை காரணமாக குண்டும் குழியுமான சாலைகள் சேரும் சகதியுமாக நடந்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.

மேலும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால்  ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. திருப்பத்தூர் கச்சேரி தெரு, செட்டி தெரு, முத்துக்குமாரசாமி கோவில் தெரு, மருத்துவர் தெரு, சிவராவ்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் சேற்றில் சிக்கி கீழே விழும் அவலநிலை உள்ளது. எனவே பாதாள சாக்கடை திட்ட பணிகள் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக தார் சாலைகளாக மாற்ற வேண்டும் என சமூக அறிவியல் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story