வேலூர் மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 22 போலீசார் அதிரடி மாற்றம்


வேலூர் மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் உள்பட 22 போலீசார் அதிரடி மாற்றம்
x
தினத்தந்தி 15 July 2021 11:41 PM IST (Updated: 15 July 2021 11:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 14 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 22 போலீசாரை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலூர்
14 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த தனிப்பிரிவு 14 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 22 போலீசாரை அதிரடியாக போலீஸ் சூப்பிரண்டு பணியிட மாற்றம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-

சத்துவாச்சாரி போலீஸ் நிலைய தலைமை காவலர் கணேசன் அதே போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் சத்துவாச்சாரி போக்குவரத்து பிரிவிற்கும், விரிஞ்சிபுரம் போலீஸ் நிலைய தலைமை காவலர் குமரன் அதே போலீஸ் நிலைய தனிப்பரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் பொன்னைக்கும், பனமடங்கி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் திருவலம் போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பைசுல்லா வேலூர் தெற்கு குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் லத்தேரி தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த தலைமை காவலர் பாலமுரளி வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கும், சத்துவாச்சாரி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் அணைக்கட்டு தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மேல்பட்டி தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கும், பனமடங்கி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் பள்ளிகொண்டா தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் குடியாத்தம் தாலுகா தனிப்பிரிவு போலீசாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
22 போலீசார் பணியிட மாற்றம்

பாகாயம் போலீஸ் நிலைய முதல்நிலை காவலர் ராஜாதேசிங் அதே போலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் மாவட்ட சிறப்புப்பிரிவு தலைமையிடத்துக்கும், விருதம்பட்டு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் அதேபோலீஸ் நிலைய தனிப்பிரிவு போலீசாகவும், வேலூர் தெற்கு போலீஸ் நிலைய தலைமை காவலர் ஜெயகரன் வேலூர் வடக்கு தனிப்பிரிவு போலீசாகவும், வேலூர் போக்குவரத்து தலைமை காவலர் ராஜசேகர் வேலூர் தெற்கு தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த முரளிகிருஷ்ணன் வேலூர் போக்குவரத்து பிரிவுக்கும், குடியாத்தம் தாலுகா சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்துக்கும், குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு தலைமை காவலர் வினோத்குமார் குடியாத்தம் டவுன் தனிப்பிரிவு போலீசாகவும், அங்கு பணிபுரிந்த தலைமை காவலர் ஹரிதாஸ் கே.வி.குப்பம் போலீஸ் நிலையத்துக்கும் என மொத்தம் 22 போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story