கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா


கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 16 July 2021 12:31 AM IST (Updated: 16 July 2021 12:31 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கரூர்
காமராஜர் பிறந்தநாள் விழா
கரூர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் மனோகரா கார்னரில் உள்ள காமராஜர்உருவ சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. 
இதில் கரூர் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவரும், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவருமான லியோ சதீஷ்குமார், வடக்கு நகர தலைவர் ஸ்டீபன் பாபு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
நாடார் மகாஜன சங்கம்
இதேபோல் கரூர் மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் சங்க முன்னாள் துணைத்தலைவர் வக்கீல் ராமகோவிந்தன், நாடார் பைனான்ஸ் நிர்வாக இயக்குனர் கூடலரசன், மாவட்ட துணை தலைவர் காமராஜ், செயற்குழு உறுப்பினர் ராசி சதீஸ், பாண்டியனார் தொழிற்சங்க நிர்வாகி சாமிநாதன், கரூர் காமராஜர் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 
பல்வேறு அமைப்புகள்
இதேபோல நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கரூர் மாவட்ட நாடார் ஐக்கிய சங்கம், காமராஜர் மக்கள் பேரவை, சுதந்திர போராட்ட தியாகிகள் வாரிசுகள் சங்கம், சமத்துவ மக்கள் கழகம் மற்றும் நாடார் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தாந்தோணிமலை
தாந்தோணிமலை அரசு கலைக்கல்லூரி அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் சுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அரசு பள்ளி
கரூர் தாந்தோன்றி ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவப்படத்திற்கு பள்ளி தலைமையாசிரியர் சுமதி தலைமையில், ஆசிரியர்கள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
தோகைமலை
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா பள்ளி தலைமை ஆசிரியர் வளர்மதி தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

Next Story