‘நீட்’ தேர்வு தடை சட்டத்தை முதல்-அமைச்சர் துணிந்து இயற்ற வேண்டும்; திருமாவளவன் எம்.பி. பேட்டி


‘நீட்’ தேர்வு தடை சட்டத்தை முதல்-அமைச்சர் துணிந்து இயற்ற வேண்டும்; திருமாவளவன் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 16 July 2021 12:54 AM IST (Updated: 16 July 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கான தடை சட்டத்தை முதல்-அமைச்சர் துணிந்து இயற்ற வேண்டும் என்று திருமாவளவன் எம்.பி. கூறினார்.

செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே அங்கனூர் கிராமத்தில் தனது தந்தை தொல்காப்பியனின் நினைவு நாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு, நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், அனைத்து கட்சி தலைவர்கள் மத்திய நீர்ப்பாசன துறை மந்திரியை சந்திக்க உள்ளோம். தமிழக மக்கள் நலன் கருதி பிரதமர் மோடி, கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும். மத்திய அரசு நல்ல முடிவை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு பொறியியல் நுழைவுத்தேர்வு கூடாது என்று தடை சட்டம் கொண்டு வந்தது தி.மு.க. அரசு. அதேபோல் ‘நீட்’ தேர்வு வேண்டாம் என்ற தடை சட்டத்தை முதல்-அமைச்சர் ஸ்டாலின் துணிந்து இயற்ற வேண்டும். ‘நீட்’ தேர்வை விலக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களை காக்க வேண்டும். எதையும் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செய்துவிட முடியாது. ‘நீட்’ தேர்வை ரத்து செய்வதற்கான முதல் படிதான் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து ‘நீட்’ தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பார்கள். கொரோனா தொற்று ஆபத்தானது. எனவே பள்ளிகளை திறப்பதில் அவசரம் தேவை இல்லை என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேண்டுகோள் ஆகும், என்றார்.

Next Story