கொரோனாவுக்கு 2 மூதாட்டிகள் பலி
அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 மூதாட்டிகள் உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 30 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முைறயே 61, 60 வயதுடைய மூதாட்டிகள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 37 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 372 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 843 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,169 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story