கொரோனாவுக்கு 3 பெண்கள் பலி
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பெண்கள் உயிரிழந்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 24 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முறையே 80, 62, 53 வயதுடைய 3 பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களில் 12 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 187 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 667 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,045 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 2,680 டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story