மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; வேன், மொபட் பறிமுதல்


மணல் கடத்திய 2 பேர் மீது வழக்கு; வேன், மொபட் பறிமுதல்
x
தினத்தந்தி 16 July 2021 12:55 AM IST (Updated: 16 July 2021 12:55 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேன், மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.

தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகில் உள்ள இடங்கண்ணி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருபவர் தினேஷ். இவர் அவரது உதவியாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இடங்கண்ணி நெல் கொள்முதல் நிலையம் அருகே எதிரே வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அப்போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். வேனை சோதனை செய்தபோது அதில் 6 மூட்டைகள் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வேனை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி, இடங்கண்ணி ஆசாரி தெருவை சேர்ந்த சண்முகம் மகன் சதீஷ் (27) என்பவர் மீது சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இதேபோல் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராம நிர்வாக அதிகாரி அசோக்குமார் ரோந்து சென்றபோது, தென்கச்சி பெருமாள் நத்தம் கொள்ளிடக் கரையில் காலனி தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் தனராஜ் (24) என்பவர் மொபட்டில் மணல் மூட்டை கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

Next Story