செலவுக்கு தாய் பணம் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை
செலவுக்கு தாய் பணம் தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள காங்கேயன்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மனைவி சுமதி(வயது 47). இவர்களது இளைய மகன் விஜய் (22). இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். மேலும் விஜய்க்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும், இதனால் குடும்பத்தில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் விஜய் செலவுக்கு பணம் கேட்டபோது, அவருடைய தாய் தர மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த விஜய் ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் சுமதி அளித்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Related Tags :
Next Story