டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு


டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 July 2021 1:16 AM IST (Updated: 16 July 2021 1:31 AM IST)
t-max-icont-min-icon

திருவலம் அருகே குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

திருவலம்,

திருவலத்தை அடுத்த கசம் பகுதியில் உள்ள டாஸ்மாக்  கடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சுவற்றில் ஓட்டை போட்டு இரண்டு முறை திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் அந்த டாஸ்மாக் கடையை அங்கிருந்து அதேப்பகுதியில் உள்ள வேறு ஒரு கட்டிடத்திற்கு மாற்ற டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதுகுறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள், டாஸ்மாக் கடை அமைய உள்ள கட்டிடம், குடியிருப்பு பகுதி உள்ள இடமாகும், எனவே இப்பகுதியில் மதுபான கடையை திறக்கக் கூடாது என்று கூறி புதிய கடை அமைய உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸ் துணை சூப்பிரண்டு பழனி, காட்பாடி தாசில்தார் பாலமுருகன், டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனர்.  அப்போது பழைய இடத்திலேயே டாஸ்மாக் கடை செயல்படும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story