தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை


தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 16 July 2021 1:30 AM IST (Updated: 16 July 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்ெகாலை செய்து ெகாண்டார்.

விருதுநகர், 
விருதுநகர் அருகே உள்ள ஆனைக்குட்டத்தை சேர்ந்தவர் மீனாட்சி (வயது46). இவரது மகன் சுந்தரமூர்த்தி (21). இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மீனாட்சி, சுந்தரமூர்த்தியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து  மீனாட்சி தனது மகளுடன் கோவை சென்றிருந்த போது சுந்தர மூர்த்தி வீட்டில் தனியாக இருந்த நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மீனாட்சி கொடுத்த புகாரின் பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Tags :
Next Story