7 சிறுவர் - சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம்


7 சிறுவர் - சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம்
x
தினத்தந்தி 16 July 2021 1:59 AM IST (Updated: 16 July 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

நரிக்குடி அருகே காட்டுப்பகுதியில் உள்ள காய்களை தின்ற 7 சிறுவர் - சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரியாபட்டி, 
நரிக்குடி அருகே காட்டுப்பகுதியில் உள்ள காய்களை தின்ற 7 சிறுவர் - சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
வாந்தி மயக்கம் 
 நரிக்குடி அருகே உள்ள இருஞ்சிறை கிராமத்தில் ெஜயதர்ஷினி (வயது 9),பாலாஜி (12), சரவணன் (10),கவின் (11), சத்யபிரியா (8), கதிர் (14), பொன்முகேஷ் ( 11) ஆகியேர் அதே பகுதியில் உள்ள பள்ளிக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் நேற்று மாலை விளையாடிக்கொண்டு இருந்தனர். 
அப்போது அங்குள்ள ஒரு செடியில் இருந்து ஏதோ ஒரு காய்களை பறித்து தின்றுள்ளனர். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து விட்டனர். 
சிறிது நேரத்தில் அந்த குழந்தைகளுக்கு ஒன்றன் பின் ஒன்றாக வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிறுவர், சிறுமிகள் சிகிச்சைக்காக  நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 
மருத்துவமனையில் அனுமதி 
அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக  அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
ஒரேநேரத்தில் 7 சிறுவர்- சிறுமிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. 

Next Story