புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு
திருச்சுழியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
காரியாபட்டி,
விருதுநகர், அருப்புக்கோட்டை காரியாபட்டி பகுதியிலிருந்து ராமேசுவரம் செல்பவர்கள் திருச்சுழி வழியாக தான் செல்வார்கள். திருச்சுழி தொகுதியில் முக்கிய ஊராக திருச்சுழி உள்ளது. இதனால் இங்கு பஸ்நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தநிலையில் திருச்சுழி ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்திற்கு சொந்த மான இடத்தில் பஸ் நிலையம் அமைக்க திருச்சுழி ஊராட்சி ஒன்றியக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தினை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது திருச்சுழி யூனியன் தலைவர் பொன்னுத்தம்பி, நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனப் பாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிவாசகம், நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் ப.பா.போஸ், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், திருச்சுழி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story