சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
ஆலங்குளத்தில் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஜோதி நகரைச் சேர்ந்தவர் சங்கர். இவர் தனது பழைய வீட்டை இடித்து விட்டு, புதிதாக வீடு கட்ட ஏற்பாடு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் பழைய வீட்டை இடிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இந்த பணியில் ஆலங்குளம் அருகே முத்துகிருஷ்ணபேரி வடக்கு தெருவைச் சேர்ந்த பலவேசமுத்து மகன் சக்திவேல் (வயது 20) உள்ளிட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
வீட்டின் கான்கிரீட் சிலாப்பை இடித்தபோது, எதிர்பாராதவிதமாக சுவர் சரிந்து சக்திவேலின் மீது விழுந்து அமுக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆலங்குளம் போலீசார் விரைந்து சென்று, சக்திவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story