பொதுமக்கள் தர்ணா


பொதுமக்கள் தர்ணா
x
தினத்தந்தி 16 July 2021 5:32 PM IST (Updated: 16 July 2021 5:32 PM IST)
t-max-icont-min-icon

பொதுமக்கள் தர்ணா

அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பெரிச்சல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தோட்டத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் நேற்று முன்தினம் தடுப்பூசி போடுவதற்காக சென்றனர். அப்போது அங்கிருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் இன்று பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடையாது என்றும், கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடுவதாக கூறினர். ஆனால் அன்று ஒரு சில கர்ப்பிணிகளுக்கு மட்டுமே தடுப்பூசி போட்ட நிலையில், ஊழியர்களுக்கு வேண்டிய சிலரை அழைத்து தடுப்பூசி போட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியில் பரவியதை தொடர்ந்து தோட்டத்துப்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நேற்று காலை நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். 
பின்னர் கர்ப்பிணிகள் தவிர பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி தொடர்பாக அங்கிருந்த ஊழியர்களிடம் கேட்டனர். மேலும் இன்று எங்களுக்கு தடுப்பூசி போடுமாறும் கூறினர். அப்போது ஊழியர்கள் முறையாக பதில் தெரிவிக்காததை தொடர்ந்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தடுப்பூசி வந்த உடன் முறையாக தகவல் தெரிவித்து, பொதுமக்களுக்கு போட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 


Next Story