மாவட்ட செய்திகள்

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி + "||" + IAS to keep Marina Beach clean Why not form an officer-led committee? Government of Tamil Nadu, iCourt question

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் குழுவை ஏன் அமைக்கக்கூடாது? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழுவை ஏன் அமைக்கக்கூடாது? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் ஐஸ்கிரீம் வியாபாரிகளுக்கும் கடைகள் ஒதுக்க கோரிய வேலுமணி உள்பட பலர் ஐகோர்ட்டில் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகள் எல்லாம், நீதிபதிகள் என்.கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.


அப்போது நீதிபதிகள், ‘‘உலகின் பெரிய கடற்கரையான மெரினாவை முறையாக பராமரிப்பதில்லை. அதை பற்றி யாரும் கவலை கொள்வதும் இல்லை’’ என்று கருத்து தெரிவித்தனர்.

அதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான வக்கீல், முறையாக பராமரிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் சென்னை மாநகராட்சியின் மண்டல அதிகாரியையும், சென்னை போலீஸ் கமிஷனரையும் எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்து நீதிபதிகள் சேர்த்தனர்.

மீனவர்கள் அங்காடி

பின்னர், நீதிபதிகள் சரமாரியாக கேள்வி கேட்டு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மெரினா கடற்கரையில் குப்பை போடுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறதா? தினமும் எவ்வளவு குப்பைகள் அங்கு சேகரிக்கப்படுகிறது? மெரினா கடற்கரையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கடற்கரையில் கழிவறைகள் மற்றும் நடமாடும் கழிவறைகள் எத்தனை உள்ளன?

கடற்கரை பராமரிப்பிற்காக எவ்வளவு தொகை செலவிடப்படுகிறது? கடை உரிமையாளர்களிடம் இருந்து எவ்வளவு வாடகை வசூலிக்கப்படுகிறது? குற்றங்கள் நடக்காத வகையில் இரவு 10 மணிக்கு பிறகும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனரா? மெரினா லூப் சாலை அருகிலேயே மீனவர்களுக்கான மீன் அங்காடியை ஏன் அமைக்கக்கூடாது? மெரினா கடற்கரையின் அழகை பாதுகாக்க மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?

விளக்கம் வேண்டும்

மெரினா கடற்கரையை சுத்தமாக பராமரிப்பதற்கு ஐ.ஏ.எஸ்., அந்தஸ்தில் உள்ள அதிகாரி தலைமையில், சென்னை மாநகராட்சி, தமிழ்நாடு பொதுப்பணித்துறை, காவல்துறை, சுற்றுச்சூழல் மற்றும் சமுக ஆர்வலர்கள், வியாபாரிகளின் பிரதிநிதிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதி ஆகியோர் அடங்கிய குழுவை தமிழக அரசு ஏன் அமைக்கக்கூடாது?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் விரிவான விளக்கத்தை தமிழக அரசு அளிக்க வேண்டும். விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
தேர்தலில் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு நத்தம் விஸ்வநாதன் பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு.
2. அ.தி.மு.க. தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றது சட்டவிரோதம் இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டதில் சட்டவிரோதம் இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
3. கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு விதித்த தடையை நீக்க ஐகோர்ட்டு மறுப்பு
கல் அரைக்கும் கிரஷர் தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
4. ‘நீட்’ தேர்வு பிரச்சினை போல் ‘7 பேர் விடுதலையையும் தி.மு.க. அரசு நீர்த்துப்போக செய்துவிட்டதோ?’ ஓ.பன்னீர்செல்வம் கேள்வி
‘நீட்’ தேர்வு பிரச்சினை போல் 7 பேர் விடுதலையையும் தி.மு.க. அரசு நீர்த்துப்போகச் செய்துவிட்டதோ என்று ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
5. அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலினை ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது
அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு மு.க.ஸ்டாலினை ஆஜராகும்படி சிறப்பு கோர்ட்டு வலியுறுத்தக் கூடாது ஐகோர்ட்டு உத்தரவு.