ரூ.3 கோடி நிலம் மீட்பு


ரூ.3 கோடி நிலம் மீட்பு
x
தினத்தந்தி 16 July 2021 9:58 PM IST (Updated: 16 July 2021 9:58 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே 3 கோவில்களுக்குச் செந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.

தாராபுரம்
தாராபுரம் அருகே 3 கோவில்களுக்குச் செந்தமான  ரூ.3 கோடி மதிப்பிலான நிலத்தை இந்து அறநிலையத்துறையினர் மீட்டனர்.
கோவில் நிலம்
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவை மீட்கப்பட்டு வருகிறது. அதே போல் தாராபுரம் பகுதியில் உள்ள கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்தால் அவற்றை உடனே மீட்குமாறு இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தார். 
அதன்படி தாராபுரம் பகுதியில் திருப்பூர் இணை ஆணையர் நா.நடராஜன் தலைமையில், உதவி ஆணையர் வெங்கடேஷ், தாராபுரம் சரக ஆய்வர் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று பொன்னாபுரம் ஊராட்சி தாராபுரம் ஏரகாம்பட்டி கிராமத்தில் நாகேஸ்வரசாமி கோவிலுக்கு சொந்தமான ரூ.1.50 கோடி மதிப்புள்ள 15 ஏக்கர் நிலத்தை மீட்டனர். இதே கோவிலுக்குச் சொந்தமான ரூ.78 லட்சம் மதிப்புள்ள 12 ஏக்கர் 95 செண்ட் நிலத்தை 4 தனிநபர்களிடமிருந்து ஆக்கிரமித்து வைத்திருந்ததை மீட்டனர்.
காசிவிஸ்வநாதர் கோவில்
அதே போல, பொன்னாபுரம் கிராமத்தில் காசிவிஸ்வநாதர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 5 ஏக்கர் 47 செண்ட் நிலத்தையும் மீட்டனர்.
அதன்படி மொத்தம் 33 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இதன்மொத்த சந்தை மதிப்பு ரூ.3 கோடியாகும். மேலும், இந்த இடங்களில் கோவிலுக்குச் சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் அதிகாரிகள் வைத்தனர்.

Next Story