2 பேர் கைது


2 பேர் கைது
x
தினத்தந்தி 16 July 2021 10:12 PM IST (Updated: 16 July 2021 10:12 PM IST)
t-max-icont-min-icon

குடிமங்கலத்தில் போலி குறுந்தகவல் அனுப்பி கோழிக்கடைக்காரரிடம் ரூ.3 ஆயிரம் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிமங்கலம், ஜூலை.17-
குடிமங்கலத்தில் போலி குறுந்தகவல் அனுப்பி கோழிக்கடைக்காரரிடம் ரூ.3 ஆயிரம் மோசடி செய்த  2 பேரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கோழிக்கடைக்காரர்
 திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் முருகன்பட்டியை சேர்ந்தவர் அருண்ராஜ்வயது 36. கோழிக்கடை நடத்தி வருகிறார். இவருடைய கடை முன்பு நேற்று முன்தினம் இரவு ஒரு கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் அருண்ராஜிடம் நாங்கள் கோவையில் இருந்து மதுரை செல்கிறோம்.  அவசரத்தில் பணம் கையில் எடுக்காமல் வந்து விட்டோம். தற்போது எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அவசர செலவுக்காக பணம் கொடுத்தால் ஆன்லைன் மூலம் பணம் அனுப்புவதாக கூறியுள்ளனர். 
அப்போது  அதில் ஒருவர் கோழிக்கடைக்காரர் செல்போன் நம்பரை வாங்கி தனது போனிலிருந்து கோழிக்கடைக்காரர் வங்கிக்கணக்கில் ரூ. 3 ஆயிரம் செலுத்தியதாகவும், அதற்கான குறுஞ்செய்தி செல்போன் மூலம் அனுப்பியதாகவும் கூறினார். அதனை நம்பி கையில் இருந்த ரூ.3 ஆயிரம் பணத்தை அருண்ராஜ் அந்த வாலிபர்களிடம் கொடுத்தார். அந்த பணத்தை பெற்றுக்கொண்ட வாலிபர்கள் அங்கிருந்து சென்றனர்.
மோசடி
அதை தொடர்ந்து அருண்ராஜன் தனது வங்கி கணக்கை சரிபார்த்த போது பணம் அனுப்பாமல் போலி குருஞ் செய்தியை அனுப்பியதும், அந்த வாலிபர்கள் ஏமாற்றி பணத்தை மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்த ஆசாமிகள்  2 பேரையும் அருண்ராஜ் தேடி சென்றார். அப்போது  மடத்துக்குளம் நால்ரோட்டில் காரில் அந்த 2 வாலிபர்களும் வருவது தெரியவந்தது.
 இதையடுத்து அவர்கள் 2 பேரையும் பிடித்தார். அப்போது அவர்களுக்கு  வலிப்பு வந்தது. இதனால் அவர்களின் கையில் இரும்பு கம்பியை கொடுத்தார். அந்த கம்பியை பிடித்த ஆசாமிகள் திடீரென்று தப்பிக்க முயன்றனர். அப்போதுதான் அவர்களுக்கு வலிப்பு வரவில்லை என்றும் வலிப்பு வந்ததுபோல் நடித்து தப்பிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட அருண்ராஜ் அவர்களை பிடித்து  குடிமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். 
கைது
விசாரணையில் அவர்களில் ஒருவர் கோவை சரவணம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி என்பவரின் மகன் சாமுவேல் 22 என்றும், மற்றொருவர் மதுரை அனுப்பானடியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கவுதம் 22 என்றும் தெரியவந்தது. நண்பர்களான இவர்கள் அருண்ராஜை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். 
  

Next Story