சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
சூலக்கல் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்
கிணத்துக்கடவு
ஆனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் கிணத்துக் கடவு தாலுகா பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நேற்று அதிகமாக காணப்பட்டது.
கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் நேற்று காலையில் நடை திறக்கப்பட் டது.
காலை 7.30 மணிக்கு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கா ரம் நடைபெற்றது. இதில் சூலக்கல் மாரியம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
மதியம் 12 மணிக்கு உச்சிகால பூஜை நடைபெற்றது. இதில் ஏராள மான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
கோவில் நிர்வாகம் சார்பில்பக்தர்களுக்கு சானிடைசர், உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகு சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் பட்டனர்.
இதேபோல் கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவில், கரியகாளியம்மன் கோவில், பிளேக் மாரியம்மன் கோவில், சிவலோக நாதர், சிவலோக நாயகி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story