தொழில் முனைவோர் சேவை மையம்- கலெக்டர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்
தூத்துக்குடியில் தொழில் முனைவோர் சேவை மையத்தை கலெக்டர் செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் தொழில் முனைவோர் சேவை மையத்தை, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் தொடங்கி வைத்தார்.
தொழில் முனைவோர் சேவை மையம்
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனமும், தூத்துக்குடி மாவட்ட சிறு தொழில் சங்கமான துடிசியாவும், மாவட்ட தொழில் மையமும் இணைந்து தொழில் முனைவோர் சேவை மையத்தை தூத்துக்குடி ராம்நகரில் உள்ள துடிசியா அரங்கத்தில் தொடங்கி உள்ளது.
இதன் தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் முதன்முறையாக தூத்துக்குடியில் துடிசியா உதவியுடன் தொழில் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், திட்டமதிப்பீடு, அரசு வழங்கும் ரூ.50 ஆயிரம் முதல் 5 கோடி வரையில் உள்ள மானிய திட்டங்களான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதம மந்திரியின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், மூலம் கடன் உதவி பெறும் வழிமுறைகள், இளம் மற்றும் புதிய தொழில் முனைவோர்கள் அந்த தொழிலில் வெற்றி பெறும் வரையிலும் வெற்றி பெற்ற தொழில் முனைவோர்களால் ஆலோசனை வழங்கப்படுகிறது.
தொழில் முனைவோர் ஊக்குவிப்பு
மேலும் இச்சேவை மையம் தொழில் முனைவோர்களை ஊக்குவிப்பதற்கும், தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும், பேரிடர் சமயத்தில் நல்வழி காட்டுவதற்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்படுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை எட்டயபுரம் ரோடு ராம் நகரில் அமைந்துள்ள துடிசியா அரங்கத்தில் நடைபெறும்
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில், மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் சுவர்ணலதா, துடிசியா தலைவர் நேரு பிரகாஷ், பொது செயலாளர் ராஜ்செல்வின், பொருளாளர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story