ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்


ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திறன் மேம்பாட்டு மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 16 July 2021 10:33 PM IST (Updated: 16 July 2021 10:33 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் 600 பேருக்கு பயிற்சி அளிக்க திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் 600 பேருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து ஸ்டெர்லைட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பயிற்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம், தாமிர முத்துக்கள் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்குவதற்காக, ஒரு பயிற்சி மையத்தைத் தொடங்கி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 180 வேதாந்தா ரோஜ்கர் மையங்களின் மூலம், 12 லட்சம் இளைஞர்களுக்கு இந்த அமைப்புகள் பயிற்சி வழங்கப்பட்ட உள்ளது. 2021-22-ம் நிதியாண்டில், 101 புதிய மையங்கள் தொடங்கப்படுகிறது. அதன்படி முதல்கட்டமாக முதல் பயிற்சி மையம், தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் உதவியோடு தொடங்கப்பட்டு உள்ளது.

600 பேர்

முதலில் தையல் பயிற்சி, வெல்டிங், சரக்குப் போக்குவரத்து வினியோகம், உணவுப் பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. அனைத்துப் பயிற்சிகளும், முறையான தனிமனித இடைவெளியைப் பின்பற்றி நடத்தப்படுகிறது-. ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பயிற்சி அளிக்ப்படுகிறது. முதற்கட்டமாக 600 இளைஞர்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ள ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம், அதனை பின்னர் 1500 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் விரிவுபடுத்த திட்டமிட்டு உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி சுமதி கூறுகையில், “கடுமையாக உழைப்பதிலும் பெரிதாக கனவு காணுவதிலும் இளைஞர்களுக்கு உள்ள எல்லையற்ற திறன், இந்தப் பயிற்சித் திட்டங்களின் மூலம் கூர்மைப்படுத்தப்படும் என்று நம்புகிறேன். அதன்மூலம் அனைத்துச் சமுதாயங்களிலும் ஒருமித்த வளர்ச்சி ஏற்படும் என்றே கருதுகிறேன்” என்றார்.

Next Story