புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் குருசு கோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் திருத்தல திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து ஆலயம் முன்புள்ள கொடி மரத்திற்கு மிக்கேல்தூதர் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக சென்றார். பின்னர் மாலை 6.30 மணிக்கு கொடிகளை மந்திரித்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு 7 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் பங்குதந்தை கிஷோக் முன்னிலையில் மணப்பாடு மறைமாவட்ட முதன்மை குரு இருதயராஜ் தலைமை தாங்கி கொடியேற்றினார்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் மக்கள் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திருவிழா நிகழ்ச்சிகள் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருவிழா நாட்களில் தினமும் காலை 5.30 மணிக்கு திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு நற்கருணை ஆராதனையும் நடைபெறுகிறது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்குதந்தைகள் ரொனால்டு, டிக்சன், ஜெயகர், சந்திஸ்டன், இன்பன்ட், பபிஸ்டன் மற்றும் பங்கு பேரவை, ஊர்நலக்கமிட்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story