மகனை கொலை செய்த தந்தை கைது


மகனை கொலை செய்த தந்தை கைது
x
தினத்தந்தி 16 July 2021 10:37 PM IST (Updated: 16 July 2021 10:37 PM IST)
t-max-icont-min-icon

மகனை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.

சாயல்குடி, 
சாயல்குடி அருகே மாரியூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது50). கூலி வேலை செய்து வருகிறார். அவரது மகன் லிங்கம் (25). இவர் ேவலைக்கு செல்லாமல் தினமும் குடித்து வந்து தனது தந்தையிடம் தகராறு செய்து வந்துள்ளார்.நேற்று இரவு குடிபோதையில் தனது தந்தை முனியாண்டியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த முனியாண்டி அரிவாளால் லிங்கத்தை வெட்டி கொலை செய்தார். இதுகுறித்த தகவலின்பேரில் சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றி கடலாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை செய்த முனியாண்டியை கைது செய்தார்.

Next Story