ஊட்டி ஏகலைவா அரசு மாதிரி பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு
ஊட்டி ஏகலைவா மாதிரி அரசு பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
ஊட்டி
ஊட்டி ஏகலைவா மாதிரி அரசு பள்ளியில் பழங்குடியின மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது.
உண்டு உறைவிட பள்ளி
நீலகிரி மாவட்டம் ஊட்டி கோடப்பமந்து அரசு உயர்நிலை பள்ளியில் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி செயல் பட்டு வந்தது.
இந்த பள்ளிக்கு புதிய கட்டிடம் ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் பழங்குடியின ஆராய்ச்சி மையத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் நலத்துறை மூலம் கட்டப்பட்டு வருகிறது.
6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை வகுப்பறைகள், மாணவர் கள் மற்றும் மாணவிகள் தனித்தனியாக தங்கி படிக்க வசதிகள், ஆசிரியர்கள் தங்க குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
கடந்த 2016-ம் ஆண்டு அரசு ஏகலைவா உண்டு உறைவிட பள்ளி தொடங்கியபோது, 60 பேர் மட்டுமே இருந்தனர். நீலகிரியில் வாழ்ந்து வரும் தோடர், கோத்தர், பனியர், இருளர், காட்டு நாயக்கர், குரும்பர் ஆகிய பழங்குடியின மக்களின் குழந்தைகள் படிப்பதற்காக பள்ளியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியை வனிதா கூறியதாவது:-
சேர்க்கை அதிகரிப்பு
பழங்குடியினர் மாணவர்களுக்காக செயல்படும் இந்த பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது. தற்போது 300 பேருக்கும் மேல் படித்து வருகின்றனர்.
10 பேர் பிற மாவட்டங்களில் இருந்து சேர்ந்து உள்ளனர். வனப்பகுதிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் தினமும் பள்ளிக்கு வந்து படித்து செல்ல சிரமம் என்பதால், தங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
100 சதவீத மானியத்தில் உணவு, தங்கும் இடம், பாடப்புத்தகங் கள், சீருடை வழங்கப்படுகிறது. அவர்களுக்கு என்.சி.சி., என்.எஸ்.எஸ்., கராத்தே, யோகா போன்ற விளையாட்டு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
ஆங்கில மொழியில் பாடங்கள் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு முதல் புதிய கட்டிடத்தில் இயங்குவதோடு, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
பழங்குடியின மாணவர்களுக்காக அரசு ஏற்படுத்திய இந்த வாய்ப்பை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story