ஏலகிரி மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு


ஏலகிரி மலையில் 100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்து கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 16 July 2021 11:21 PM IST (Updated: 16 July 2021 11:21 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் 100 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்து கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

ஜோலார்பேட்டை

100 ஏக்கரில் தாவரவியல் பூங்கா

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கும் ஏளகிரிமலைக்கு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இங்கு கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடைவிழாவில் சுற்றுலா பயணிகள் திரளாக கலந்து கொள்வார். 

சுற்றுலா தலமான ஏலகிரிமலையில் 100 ஏக்கரில் தாவரவியில் பூங்கா அமைக்கப்பட இருக்கிறது. இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா நேற்று ஏலகிரி மலையில் 100 ஏக்கர் பரப்பளவில்  தாவரவியல் பூங்கா அமைப்பது குறித்து தோட்டக்கலை, பொதுப்பணி மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

படகுத்துறை

அப்போது பூங்கா அமைக்க 100 ஏக்கர் அளவீடு செய்யவும், அதேப் பகுதியில் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கவும் அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நிலாவூர் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும்  படகுத்துறை மற்றும் பூங்காக்களை மீண்டும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்ட அறிக்கை தயார் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இங்கு மீண்டும் படகுத்துறை மற்றும் பூங்காக்கள் செயல்பட இருப்பதால் இங்கு உள்ள மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெறும் என அங்குள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Next Story